அந்த 4 M இருக்கு பாத்தீங்களா.. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணுங்க.. நீங்கதான் பெஸ்ட்!

Su.tha Arivalagan
Mar 10, 2026,02:46 PM IST

- எஸ்.பி. அம்புஜா


உங்கள் வாழ்வை மாற்றும் 4 'M'கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா.. தெரிஞ்சுக்கங்க.. அதில் நீங்க எக்ஸ்பர்ட் ஆயிட்டா.. நீங்கதாங்க பெஸ்ட்.


உங்கள் வாழ்க்கையை வளமாக்க இந்த 4 'M' களை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.


அதாவது.. Mouth (வாய்), Mood (மனநிலை), Mind (மனம்), Money (பணம்).


1. வாயைக் கட்டுப்படுத்துங்கள் 




உங்கள் சொற்கள் எப்போதும் அன்பானவையாக இருக்கட்டும். ஒருமுறை வெளிப்பட்ட சொல், எக்காலத்திலும் பின்னோக்கி வருவதில்லை. பேசும் முன் நிதானம் அவசியம்.


2. மனநிலையைக் கட்டுப்படுத்துங்கள் 


உணர்ச்சிகள் உங்களை ஆள அனுமதிக்காதீர்கள். இக்கட்டான சூழல்களில் அமைதியாக இருக்கும் இதயமே இறுதியாக வெற்றி பெறுகிறது.


3. மனதைக் கட்டுப்படுத்துங்கள் 


உங்கள் எண்ணங்களைச் சீரமைத்து ஒரு வரிசையில் வைத்திருங்கள். உங்கள் எண்ணங்களின் தரமே உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கிறது.


4. பணத்தைக் கட்டுப்படுத்துங்கள் 


பணத்தைக் கவனமாகச் செலவிடுங்கள். இன்று நீங்கள் கடைப்பிடிக்கும் நிதானம், நாளை கண்ணீர் வராமல் உங்களைக் காப்பாற்றும்.


இந்த நான்கு விஷயங்களிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால், வாழ்க்கை மெல்ல மெல்ல உங்கள் வசப்படத் தொடங்கும்.


(எஸ்.பி. அம்புஜா, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)