- க.யாஸ்மின் சிராஜூதீன்
சோம்பல் என்பது ஓய்வின் நீட்சியே
அதிகசோம்பல்
வாழ்க்கைக்கு
ஆகாதே...
செயல்கள் எல்லாம் தள்ளிப்போகுமே..
விளைவுகள் எல்லாம் அதனால் நேருமே....
குடும்பம்என்றும்
குன்றா
விளக்குதான்...
சோம்பல் அதனை மங்கச்
செய்யும்தான் ...

சோம்பலை விரும்பி முயற்சியை கைவிட்டால்.....
சோம்பல் நம்மை ஆளுமே...
பிறருக்கு அடிமை ஆக்குமே .....
சோம்பலை
நாம் விரட்டினாலே
குற்றம் குறைகள் நீங்குமே...
காலந்தாழ்வு,'
மறதி, சோம்பல்
உறக்கம் இவை நான்கும்
கெட்டழிவார் விரும்பிப் பூணும் அணிகலன்கள் என திருக்குறள் எடுத்துக்கூறுது......
இன்று இளைப்பாறலாம் என்றிருந்தால்....
நாளை சாதிப்பது எவ்வாறு......
வாழ்வில் ஒளிவீச சோம்பலை
விட்டுவிடுவோம் இக்கணமே....
செயல்களை தொடங்குவோம் இனிதே......
சோம்பிப்
படுத்தால் சோம்பல் நம்மை
பாயிலேயே சுருட்டி விடும்...
வெற்றிதனை தானே விழுங்கி விடும்....
ஓய்வெடுப்போம் தேவைக்கு மட்டுமே...
எதுவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகுமே....
சோம்பலை விரட்டிடு வெற்றியை உனதாக்கிடு ...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}