மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

Sep 15, 2026,01:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வியாழக்கிழமை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பெருவிழா மிக விமர்சையாக நடைபெறுகிறது. இப் பெருவிழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


கும்பாபிஷேக நேரம் 


ஆவணி 31ஆம் தேதி வியாழக்கிழமை செப்டம்பர் 17 காலை 07:40 மணி முதல் 08 :10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற உள்ளது.

 

பூஜைகள்:


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் -6 ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை செப்டம்பர்- 16 செவ்வாய்க்கிழமை வரை கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை  பூஜைகளும், 16ஆம் தேதி பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகமும், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.




மேலும் கலசங்களில் புனித நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1008 லிட்டர் புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் செப்டம்பர் மாதம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 415 கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


செப்டம்பர் 17ஆம் தேதி தான் மீனாட்சி அம்மன் தரிசனம் :


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி( இன்று) வரை மூலவர் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்ய இயலாது. இந்த நாட்களில் மூலவர் சன்னதியில் திருப்பணிகள் தீவிரமாக மேற்கொண்டு சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்படும்.ஆகவே மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி கும்பாபிஷேக தினமான செப்டம்பர் 17ஆம் தேதி, வியாழக்கிழமை  தான் அம்மன் சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள்:


மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி ,திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிரமம் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மாநகராட்சியின் மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள்,மருத்துவ வசதிகள், மருத்துவ முகாம்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 58 இடங்களில் வாகன நிறுத்த வசதிகளும், கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவீன சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


உள்ளூர் விடுமுறை :


உலகப் புகழ்பெற்ற மதுரைஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி, ஆவணி 31 ஆம் நாள் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நாள் மதுரையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்