- டி. கலைமணி
உருண்டைக் குழம்பு செய்து சாப்பிட்டுள்ளீர்களா.. அதைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அவ்வளவு டேஸ்ட் அவ்வளவு வாசமான குழம்பு.. வாங்க செஞ்சு சாப்பிட்டுப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்_4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
புளி – சிறிது
சோம்பு –1டீஸ்பூன்
கடுகு_1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -3டீஸ்பூன்
பெரிய வெங்காயம்-3
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய்-2

உருண்டை செய்ய தேவையானவை
கடலை பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
பச்சரிசி – 2 டீஸ்பூன்
இவை மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு போட்டு அரைத்த மாவில் கலந்து இட்லி தட்டில் உருண்டை செய்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் குழம்பில் போட்டு கொதிக்க விடவும்.
அரைக்க
தேங்காய்த் துருவல், வெங்காயம் நறுக்கியது1, தக்காளி நறுக்கியது 1, சீரகம் எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், உளுத்தம் பருப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனை நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். உருண்டைகளை குழம்பில் போட்டு வேகவிடவும்.
இறுதியில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். பருப்பு உருண்டை குழம்பு ரெடி. சாப்பிடலாம் வாங்க.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம், பல் சுவை பாடல்கள், கவிதைகள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
{{comments.comment}}