- சுதா திருநாராயணன்
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
முழுமுதற் கடவுளாம் விநாயகரை இன்று பிள்ளையார் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். கஜானனன், ஹேரம்பன், டுண்டி கணபதி, லம்போதரன், அங்குச பாணி, கங்கை பெற்றோன், ஒற்றை கொம்பன், அம்பிகை தனயன், வரதன், சித்தி புத்தி விநாயகன், வக்ரதுண்டன், மகாவித்யா கணபதி, விக்ன விநாயகன் என நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுபவர் விநாயகர்.
எல்லாவிதமான விக்னங்களையும் அதாவது தடைகளையும் நீக்குபவர் விநாயகர். நமது எல்லாவிதமான பணிகளையும் நேர்த்தியுடன் பூர்த்தி செய்து தருபவர் விநாயகர். நமது நியாயமான வேண்டுகோள்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருபவர் பிள்ளையார். நமது புத்தியை தெளிவாக்குபவர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார். கொழுக்கட்டை பிரியர். மோதகப்பிரியன் என்ற பெயரும் உண்டு பிள்ளையாருக்கு.

வடக்கே பூனா நகரில் பிள்ளையார் சதுர்த்தி 11 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும். ஒரு தெருவிலேயே கிட்டத்தட்ட பத்து பிள்ளையார் சிலைகள் அலங்கார பந்தலில் வைக்கப்பட்டு மக்களால் பூஜிக்கப்படும். பூனா நகரம் முழுவதும் இதே போல் நூற்றுக்கணக்கான பிள்ளையார்கள் தெருவுக்குத் தெரு கொண்டாடப்படுவர். இசையும் நெய்வேத்யங்களும் தாராளமாக இருக்கும்.
பிள்ளையாரை விதவிதமான கோலத்தில் அலங்கரிப்பார்கள். திரைப்படப் பாடல்களுக்கு ஏற்ப லைட்டிங் அலங்காரம் பிரமாதமாக இருக்கும்.
நான் பள்ளியில் படித்த காலத்தில் தோழிகள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து "பிள்ளையார் பார்க்கப் போகிறோம்" என்று சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் பூனா நகரம் முழுக்க சுற்றி எல்லா பிள்ளையார்களையும் அலங்காரங்களையும் பார்த்து வருவோம். பதினொன்றாம் நாள் விசர்ஜனம் என்று பிள்ளையார் சிலைகள் அனைத்தும் ஆற்றில் கரைக்கப்படும். மிகப்பெரிய பிள்ளையார் சிலைகளுக்கு பதிலாக சின்ன பிள்ளையார் சிலை ஆற்றில் கரைக்கப்படும்.
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்று எல்லா வரங்களையும் அள்ளித்தரும் பிள்ளையாரை துதிப்போம்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
{{comments.comment}}