- ஔவை அ.ர.தீபா ரவி
காலை நேரத் தமிழ்த் தேநீர்!
வரியுள்ளே...
வரியுள்ளே...
கவி வந்து சேரும் நேரம்...!
செவியுள்ளே செவியுள்ளே..
இசை அலைகள் சிந்தும் சாரம்..
வரியோடு குயிலும் பாட..
ஒலியோடு மயிலும் ஆட..
இதுவோ....
இன்பம்...
(வரியுள்ளே)

எண்ணம் வண்ணமாகும்..!
ஏற்றம் கொண்டு போகும்..!!
இந்தநிலை.. நாளும் வாழும்..
வரிகள் கண்ட கண்கள்...
இசையை இதழில் சேர்க்கும்..!
காற்றினிலே அலை மோதும்..!
அன்று வந்த தாகம்..
இன்றும் தீரவில்லை..!
என்றும் தீர்ந்திடாத கன்னல் தமிழே எல்லை..!
வந்தவை யாவும்
சந்தமேதான்....!
(வரியுள்ளே)
ஓரடியில் ஔவை..
ஈரடியில் ஐயன்..
கீழடியில் தான் தொன்மை விளங்க ..!
அள்ள அள்ளக் குறையா
வெள்ளந் தன்னில் அழியா
நின்றன் புகழே
தனி நிலையே..
வீழும் என்ற எண்ணம் மட்டும் இங்கு வீழும்..
தலைமுறைகள் தாண்டி அன்னைத் தமிழ் வாழும்..
தமிழென வாழ்வோம்
தரணியில்தான்
(வரியுள்ளே)
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
{{comments.comment}}