- கவிஞர் செ வெண்ணிலா
கனவுகள் கண்டிருந்தாய்
கருத்தாய் காத்திருந்தாய்
கனநேரம் நீ சிதைந்தாய்
களம் நழுவிப் போனதடா....
போதனைகள் கேட்டு வந்தாய்
சோதனைகள் வென்று நின்றாய்
போதை உன்னை தொட்டவுடன்
போற இடம் மறந்ததடா....

அன்னை சொல் மறுத்திருந்தாய்
அன்றாடம் மறந்திருந்தாய்
அரக்கன் போதை உனை விழுங்க
அமைதியே உதிர்ந்ததடா...
உதிரம் ஓட நடந்திருந்தாய்
உன்னிடமே பேசிக்கொண்டாய்
உண்ட போதை அழுக்கினாலே
உருக்குலைந்து போனதடா....
அம்மா என்ன பாருடா தங்கம்
அக்கா ஏன் பேச்சு கேளுடா
அவனுக்கு போதை உறவானால்
அனைத்து உறவும் தோற்குதடா...
கண்ணே நீ போய்ட்டியாடா
தம்பி எங்கேடா பேசுடா
மயங்கியே நீ விழுந்து
மண்ணுக்குள்ளே போனியேடா
மாண்டு நீயும் போனியேடா
(கவிஞர் செ வெண்ணிலா B.Sc .,M.A., B.Ed. இடைநிலை ஆசிரியர். ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவடி)
தமிழ் பட்டிமன்ற உலகின் ஆளுமை சாலமன் பாப்பையா.. அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
{{comments.comment}}