சென்னை : தமிழ் இலக்கிய உலகின் முன்னணி ஆளுமையும், பிரபல பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (1936–2026) மறைவுற்ற செய்தி தமிழ் உலகை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே சுருங்கி இருந்த பட்டிமன்ற கலை மற்றும் தமிழ் இலக்கியத் தரத்தை, பாமர மக்களிடமும் எளிமையாகக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் அவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் கலை மற்றும் இலக்கிய உலகச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் இரங்கல் செய்திகள்:
.jpg)
முதல்வர் விஜய்: சாலமன் பாப்பையாவின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகம் அறியச் செய்தவர் அவர். பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமின்றி, நகைச்சுவை மற்றும் ஆழ்ந்த தமிழ் புலமையால் சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ் மற்றும் மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்றவர் சாலமன் பாப்பையா. பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் இவரது பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் என்னும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவர் என்று கூறி தனது அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து: சாலமன் பாப்பையா வெறும் பேராசிரியர் அல்லது பட்டிமன்ற பேச்சாளர் மட்டுமல்ல; அவர் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருதுகளைப் பெற்ற சிறந்த தமிழறிஞர். அவரது பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் மற்றும் அவர் ஆற்றிய தமிழ் தொண்டு ஆகிய மூன்றையும் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்: பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை: சிறந்த தமிழறிஞராக பட்டிமன்றங்கள் மூலம் சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் பாப்பையா என்றும், அவரது மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவு கூர்ந்து, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குத் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
{{comments.comment}}