- சுதா திருநாராயணன்
அடுத்த மாதம் புரட்டாசி மாதம், அதற்குப் பிறகு ஐப்பசி மாதம், துலா மாதம். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராட எல்லோரும் செல்வார்கள். என்னுடைய தோழி ஒருத்தி,
"காவேரியில் துலா ஸ்நானம் பண்ண போகலையா?" என்று கேட்டாள். நான் அதற்கு "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். அவள் முறைத்துப் பார்த்துவிட்டு அகன்றாள்.
இன்னொரு மாமி "நான் தினம் ஸ்நானம் பண்ண போனேனாக்கும். உன்ன ஒரு நாள் கூட காணலையே. ஸ்ரீரங்கத்தில் இருந்துண்டு காவேரிக்கு போக மாட்டியோடி பொண்ணே? ஏன் போகலை" ? என்று வினவினாள்.

"இல்லை மாமி, காவிரியில் முதலை வந்ததுன்னு சொன்னா. எங்கேயோ ரோடை கிராஸ் பண்ணி போச்சாம். வாட்ஸ் அப்ல செய்தி செய்தியா வந்தது. என்னை பார்த்து அது பயந்துட போறதேன்னு நான் காவேரிக்கு போகல்லை. ஆனா துலா ஸ்நானம் பண்ணறதுக்கு முன்னாடி முதலையை பார்த்தால் நல்ல சகுனம்னு சில பேர் சொன்னா. ஆனா முதலைக்கு உங்களை மாதிரி மனுஷங்களை பார்த்தா நல்ல சகுனமாமே. கேள்விப்பட்டேன். நீங்க முதலைக்கு தரிசனம் கொடுத்துட்டேளா?
நான் முதலைக்கு அல்லது முதலை எனக்கோ தரிசனம் கொடுத்த பிறகு முடவன் முழுக்கு அன்னிக்கு போகலாம்னு நினைச்சுண்டு இருக்கேன்." என்றேன்.
மாமி பீதியுடன் விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள். இது சும்மா நகைச்சுவைக்காக எழுதியது.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
தமிழுக்கு ஓர் இழப்பு!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
ரீல்ஸ் மோகம்!
தமிழ்த் தாயின் புதல்வன்!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!
{{comments.comment}}