- கா.ச. ஷர்மிளா
"பாலும் தெளிதேனும் பாகும்
பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்
தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ்
மூன்றும் தா".
- ஔவையார்
சங்கத் தமிழ் மூன்றையும் தரும்படி விநாயகரை வேண்டுகிறார்! ஔவையார். விநாயகரின் அருளால் ஆண் கவிகளை வென்று, தமிழ் நெஞ்சங்களில் ஆழப்பதிந்துவிட்ட பெண்பாற் புலவர் ஔவையார்.
இவர் விநாயகர் அகவல் என்ற யோக தத்துவங்களை விளக்கும் பாடல்களையும் பாடியுள்ளார். விநாயகரின் அருளினால் இம்மைக்கும், மறுமைக்கும் சகல நலங்களும் கிட்டும்! என்கிறார் ஔவையார்.
ஆத்தி சூடியைப் பாடும் முன்னர் ஔவையார், விநாயகரைத் துதித்துப் பாடியுள்ளார்.
"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே" என்கிறார் ஔவையார்.
ஆத்தி மாலையைச் சூடிய சிவபெருமான்
அமர்ந்த = விரும்பிய
தேவனை = விநாயகரை வணங்குவோம் என்று விநாயகரைப் பாடிய பின்னரே ஆத்திசூடியைப் பாடியிருக்கிறார்! ஔவையார்.

"முன்னை வினையின் முதலைக்
களைந்து
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறு" _ என ஔவையார், விநாயகரைப் போற்றுகிறார்.
ஔவையாருக்கு, விநாயகர் அருள் செய்த கதைகள் இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.
"வானுலகும், மண்ணுலகும் வாழ,
நான்கு மறை வாழ செய்ய தமிழ்
பார்மிசை விளங்க
ஆனை முகனைப் பரவு" _ என்கிறார் சேக்கிழார்.
அப்பரும், சுந்தரரும் தேவாரத்தில் விநாயகரைக் குறித்துப் பாடியுள்ளனர். திருமந்திரத்தில், பதினோராவது திருமுறையில் கபில தேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களில் விநாயகர் போற்றப்படுகிறார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் விநாயகரைப் பற்றி திருமந்திரத்தில் பாடியுள்ளார்..
ஐந்து கரங்களும் யானை முகமும் சந்திரனைப் போன்ற தந்தங்களைக் கொண்ட ஞானக் குழந்தையான விநாயகரை போற்றினாள் புத்தி வளரும் நலன்கள் பெருகும் என்கிறார் திருமூலர்...
பாரதியார் கணபதியை போற்றி பல நிறைய பாடல்களை பாடியுள்ளார் அனைவரும் போற்றும் பரம்பொருள் விநாயகரே என்கிறார் பாரதியார்....
தமிழில் எந்த இலக்கியத்தை படைத்தாலும் முதலில் விநாயகருக்கு காப்பு செய்யுள் பாடிவிட்டே ஆரம்பிப்பது நம் தமிழர் புலவர்களின் மரபு...
தமிழ் இலக்கியங்களில் விநாயகரை பற்றி குறிப்பிடாத இலக்கியங்கள் இல்லை.
திருமுருகாற்றுப்படையில் முருகனை, "ஒரு கை முகன் தம்பியே" என கணபதியை முன்மொழிந்தே பாடியிருக்கிறார் நக்கீரர்....
பழந்தமிழ் இலக்கியங்களும் விநாயகரை பற்றியும் பல குறிப்புகள் உள்ளன. அனைத்திற்கும் மேலாக தமிழ் பாட்டி அவ்வையாருக்கு அருள் செய்தவர் விநாயகரே ஆவர் என்பது இலக்கியத்தில் உள்ளது..
இதிலிருந்து விநாயகர் வழிபடும் தமிழகத்தில் மிகத் தொன்மையான கடவுள் விநாயகர் என்பது தெரிய வருகிறது...
நரசிம்ம பல்லவரின் படைத்தளபதி பரஞ்சோதியார் வென்றதன் நினைவாக அவரது தலைவனாக வாதாவிலிருந்து விநாயகரை இங்கே கொண்டு வந்தார் என்பது வரலாற்று இலக்கியம். அதனாலே வாதாபி கொண்டான் என நரசிம்ம பல்லவரின் அடைமொழியாகும்.
வாதாபி கணபதி என விநாயகரை அழைக்கின்றோம். இதன் பிறகு தான் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு வந்தது என்று என்கின்றனர் சில வரலாற்று குறிப்புகள்...
சிலர் இது தவறு நரசிம்ம பல்லவரின் காலத்தில் புலிகேசி வழிபட்ட விநாயகருக்கு தான் பெற்ற வெற்றிக்கு அடையாளமாக இங்கே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் விநாயகர் வழிபாடு என்பது தமிழகத்தில் மிகவும் தொன்மையானது வாதாபி என்று அரக்கனை விநாயகர் அழித்ததாலேயே அவர் வாதாபி கணபதி எனவும் அழைக்கப்படுகின்றார் என்றும் கூறுகின்றனர் ...
சாளுக்கிய புலிகேசியை வென்று இரண்டாம் நரசிம்ம பல்லவரின் சேனாதிபதி, பரஞ்சோதியார் பின்னாளில் சிவனடியார் சிவபெருமானுக்கே பிள்ளைக்கறி சமைத்து அதை சிவன் அருளால் மீண்டும் தன் மகனை உயிரோடு திரும்பப்பெற்றார் என்று சிறுதொண்ட நாயனார் கூறினார். இவ்வாறாகவும் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது...
இன்னும் தகவல் யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும்....
அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
{{comments.comment}}