Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
- கலைவாணி கோபால்
தோழீஸ்.. வாங்க குயிக்கா ஒரு டிப்ஸ் பார்க்கலாம்.. தோழாஸ்.. உங்களுக்கும் யூஸ் ஆகும், நீங்களும் தெரிஞ்சுக்கங்க.
பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் சப்பாத்தி செய்வாங்க. ஆனாலும் பலரது வீடுகளில் வரும் யூனிபார்மான புகார் என்னன்னா.. என்ன இது வரட்டி மாதிரி இருக்கு அப்படிங்கிறதுதான்.
கவலையே படாதீங்க.. அதுக்கு ஒரு சூப்பரான நிவராணம்தான் இது. இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க. சப்பாத்தி இனி ரொம்பவே சாப்ட்டா சப்பாத்தி வரும் .
சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சா மேக்ஸிமம் 30 நிமிஷம் வந்து ஊற வைக்கணும்னு சொல்லுவாங்க, அப்பத்தான் சாப்ட்டா வரும்னு சொல்வாங்க. பட், நாம மாவு பிசைந்த உடனே செய்யலாம், அதுவும் அதே மென்மையுடன்.
அந்த ரகசியம் இதுதான்.. கோதுமை மாவு பிசையும் போது, தேவையான அளவு உப்பு சேர்த்து அது கூட கொஞ்சம் பால் சேர்த்து பிசைஞ்சு சப்பாத்தி செஞ்சு பாருங்க ரொம்ப சாஃப்டா இருக்கும்.
இதைச் சாப்பிட்ட பிறகு வறட்டி என்று சொன்ன எல்லா வாயும் வாயடைச்சுப் போயிருங்க.. செஞ்சு சாப்பிட்டுட்டு சொலல்லுங்க!
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)