பெண்ணின் மனமறிந்த தோழனாய் இரு...
- தீபா ராமானுஜம்
தோழா!!!
பெண்ணும் உன்னைப்போல் பூமியில் நிம்மதியாக வாழப் பிறந்தவள்தான்...
உன்னால் முடிந்தால் அவளுடைய வாழ்வில் தென்றலாய் வீசி மகிழ்வி...
புயலாக மாறி அவளை நிலைகுலையச் செய்யாதே...
பெண்ணை நீ கொண்டாட வேண்டாம்...
அவளும் உன் அம்மா மற்றும் சகோதரி போல ஒரு ஜீவன் தான் என்று நினைத்தால் போதும்...
பெண்ணை போகப் பொருளாக மட்டும் பார்க்காதே...
அவளுக்கும் உன்னைப் போல் மனம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்...
நீ எப்படி மற்ற பெண்ணை பார்க்கிறாயோ...
அதுபோலவே உன் வீட்டுப் பெண்ணும் பார்க்கப்படுவாள்
என்பதை அறிந்து கொள்...
இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ உன்னைப் போல் அவளுக்கும் உரிமை இருக்கிறது...
பெண்ணை மதிப்பதால் நீ உன் தாய்க்கு பெருமை சேர்க்கிறாய் என்பதை மறவாதே...
பொது இடங்களில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதான் பாதுகாப்பு....
அச்சுறுத்தலாய் மாறிவிடாதே...
பெண்ணின் மனமறிந்த தோழனாய் இரு...
அவளின் உணர்வுகளை மதி...
இதுவே இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் ஆசை...
விமர்சித்து விமர்சித்து
பெண்ணைப் புண்படுத்துவதை விட
உன்னைப் பண்படுத்து...!