Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!

Su.tha Arivalagan
Apr 18, 2026,10:24 AM IST

- ஔவை அ.ர.தீபா ரவி


அன்பின் 

இதயமது 

அருகில் 

இருந்தால்

போதும்


ஆறுதலாய்ச்

சொற்களவை

செவி 

விழுந்தால் 

போதும்


சோகத்தில் 

தோள்

கொடுக்கும்

தோழமையது

போதும்


பாசவலை

அதிலே

சிறையிருந்தால்

அது

போதும்


நல்லவை

மட்டும் 

செய்யும்

மனமது

போதும்




தீயவர்க்கும்

தீமை

செய்யாக் 

குணமது 

போதும்


வறிய

நிலையிலும்

பிரியாத

உறவது 

போதும்


நேர்மறைச் 

சிந்தனையை

மட்டும் 

விதைப்பவர்

போதும்


புறங்கூறா

அகத்துடை 

சுற்றம் 

சூழ்ந்திருந்தால்

போதும்


வஞ்சகம்

இல்லா

வாழ்வது

என்றும் 

போதும்


(தமிழ் அருவி வழங்கும் விரைவுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).