மூச்சுள்ளவரை முயன்றிடு!
Sep 04, 2026,12:45 PM IST
- ஔவை அ.ர.தீபாரவி
இலக்கினை உயர்த்திடு
இமயத்தில் வைத்திடு
முன்னேறு
வழக்குகள் வந்திடின் காட்டாற்று வெள்ளமாய்க் கடந்திடு
முழக்கங்கள் ஒலித்திட
மூலை முடுக்கெல்லாம்
திகழ்ந்திடு
கலக்கங்கள் களைந்திடு
கவனமாய்ச் செயல்படு கரைதொடு
பழக்கமே வழக்கமாம்
கிழக்கது உனக்கென விடிந்திடும்
ஓடிக்கொண்டே இருந்திடு
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).