நான் எழுதுவது கவிதையல்ல..!
- ஔவை அ.ர.தீபாரவி
ஆசைதான் கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாக மாறிட
கற்பனைகள் எல்லாம் நிசங்களாக
நிலைப் பெற்றிட
வரைவதெல்லாம் ஓவியமாக
வண்ண விழிகளில் நிறைந்திட
பேச்செல்லாம் வீச்சாக மூச்செல்லாம் தமிழாக அமைந்திட
சட்டென்று
மொட்டொன்று பட்டென்று
அழகாய்
விரிந்திட..
கருவிழிகள் நான்
வரைய சிமிட்டியபடி
சிரித்திட
தட்டச்சு
செய்கையிலே விரல்கள் மகிழ்வில் துள்ளிட..
பட்டமென
நான் எழுத நூலின்றி
பறந்திட
விழுந்தாலும் விதையைப் போல அவ்விடமே எழுந்திட
கலந்தாலும் தமிழ் என்னும் கடலோடு
கலந்திட..
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).