Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
- ஔவை அ.ர.தீபாரவி
உன் அருகே
நான் இருந்தால்..
உலகம் எல்லாம்
என் அருகில்..
உன் அருகில்
நான் நடந்தால்
போகும் பாதை
அது நீளம்..
உன் அருகில் நான் அமர்ந்தால்
என் மனமோ
சிறகு விரிக்கும்..
உன் மொழிகள்
நான் கேட்டால்
என் செவியில்
தேனும் பாயும்
உன் வலிகள்
நான் உணர்ந்தால்
என் விழிகள்
நீரைச் சிந்தும்
உன் வெற்றி
நான் கண்டால்
என் உள்ளம்
மகிழ்வில் ஆடும்
உன் கைகள்
நான் கோர்த்தால்
என் ஆயுள் காலம்
கூடும்..
உன் கோபம்
நான் கண்டால்
என் உள்ளம்
மௌனம் காக்கும்
உன் பேச்சில்
கண் வீச்சில்
என் மௌனம்
தொலைந்தோடும்..
உன் அருகில்
வாழ்விருந்தால்
(தமிழ் அருவி வழங்கும் சித்திரமும் கவிதையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).