எங்கே எனது கவிதை!
-ஒளவை அ.ர.தீபா ரவி
யாவரும்
எழும்பும்
முன்னே
விழித்தலில்
ஒவ்வொரு
நாளின்
அடுத்தடுத்த நகர்வுகளில்
வாசல்
தெளித்துக்
கோலம்
இடுதலில்
காலைத்தேநீர்
முதல்
இரவுச்
சிற்றுண்டிவரை
குழந்தை
பராமரித்தலில்
குடும்ப
மகிழ்வினில்
அனைவரையும் அரவணைப்பதில்
அன்பு
செலுத்துவதில்
சிக்கனத்தில்
சேமிப்பில்
சிக்கெடுப்பதில் சீர்செய்வதில்
வெக்கத்தில்
பக்கத்தில்
மொத்தத்தில்
முத்தத்தில்
முரைப்பதில்
சிரிப்பதில்
அடிப்பதில்
அணைப்பதில்
அடக்குவதில்
அடங்குவதில்
ஆள்வதில்
வாழ்வதில்
அழுவதில்
அழவைப்பதில்
காத்திருப்பில்
கனவினில்
அரும்பினில்
குறும்பினில்
முறுவலில்
துருவலில்
வகிடினில் .
வளையலில்
கொலுசினில்
சிணுங்கலில்
சுழிவினில்
பொலிவினில்
நடையினில்
உடையினில்
சடையினில்
வடிப்பதே!
(தமிழ் அருவி வழங்கும் மகளிர் நாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).