Poem on Love: காதல்!

Apr 24, 2026,02:22 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


அதிசயமானது காதல்..

அவசியமானது

காதல்

அவசரமானது

காதல்

பரவசமானது

காதல்


உயிரினில் உயிரினை ஒருமுகமாக்கும்

தன் முகம் மறந்து

அவள் முகம் ரசிக்கும் 

தனித்துவமானது காதல்

மிக மிக கவித்துவமானது காதல்




சொல்லாமல் அள்ளிச் செல்லும் வகையானது.

காதல் சுவையானது..


சொல்லிக் கொண்டாலும்

மேலும் சொல்ல

சுவை கூடுது..


எங்கோ உடல் இருந்தபோதும் 

உயிரானது...

ஒன்றில் ஒன்றாய்ச் சேரும் போது பொருள் ஆகுது..


காற்றோடு கவிதைப் பேசும் கலையானது..!

மேலும் உள்ளூரத் துணிவை ஊட்டும் மலையானது.. 


விழியின் வழியே

புகுந்து மனத்தில்

நமை ஆள்வது..


காதல் என்ற ஒற்றைச் சொல்லில் புவி வாழுது..


அழகழகானது காதல்..

மிக மிக பேரழகானது காதல்


ஈருடல் ஓருயிராகிடும் போது

இதயத்தில் மெல்லிசைப் பாடியும் போது


உருவமில்லாதது காதல்..

இது ஒரு கர்வமில்லாதது

காதல்..


பார்வையில் மோதிய காதலும் உண்டு..


மோதலில் பாவிய காதலும் உண்டு..


காவியமானது காதல்..

ரசித்திட

ஓவியமானது காதல்!


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்