காத்திருப்பும் அழகானதே!

Su.tha Arivalagan
Sep 09, 2026,10:22 AM IST

- தனலட்சுமி


உன்னை நினைக்காத

நாளில்லை...

உன்னை நினைத்து

வருந்தாத நேரமில்லை...


அருகில் நீ இல்லாதது

மட்டும் வலியல்ல,

என் மனதில் இருக்கும்

உனக்கு

என் மனசு தெரியாததுதான்

இன்னும் அதிக வலி... 


காத்திருப்பு என்பது 

அழகிய ஒன்று,


"காணலாக இருந்தாலும் சரி" 

காதலாக இருந்தாலும் சரி"

'கனத்த மனதை வலியாக முடியும் 

வழியாகவும் முடியும்!

அதுதான் காத்திருப்பேன் என்ற

மேன்மையான உணர்வாக இருக்கும்




ஒரு அழகிய விளக்கு

எண்ணெய்  இல்லாமல் எரிந்தால் 

அந்த ஒளியில் பிரகாசம் இருப்பதில்லை


அதுபோல்தான் நம் அனைவரும்

பாசம் என்னும் ஒளியை சரிவர தராமல் இருந்தால்

உறவு என்னும் அழகே இல்லாமல்

வாழ்வு இருள் சூழ்ந்து விடும்


(தனலட்சுமி, எம்காம் பிஎட், சூரியா சர்வதேச மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட், புதுச்சேரி)