ஆலோலம் பாடும் ஆத்தோர மாங்குயிலே
Jun 26, 2026,03:48 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்
நதியோரோம் நாணலா
நடைப்போடும் செவப்பழகே
பரிதியக்காண மனமகிழும்
செந்தாமர செவ்விதழே
சுருதியாகி காலோட
கொஞ்சிடும் கொலுசொலியே
சதியென்ன செஞ்சி சாச்சிப்புட்ட
அய்த்தமகளே
கதியின்னு சுத்திவாரே
காவலுக்கு முத்தழகே
கோதிடும் கொண்டையில சூடிய
பவளமல்லியே
புத்திக் கெட்ட மாமனோடத்
தெம்மாங்கே
நெத்தியில முத்தோவச்சி
சேதிசொல்ல வாடி
ஆலோலம் பாடும் ஆத்தோர மாங்குயிலே