பாதையை மாற்றும் போதை

Su.tha Arivalagan
Jul 07, 2026,03:19 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


உள்ளிருந்து பேசுவதும்,  

உதிரத்தை உறிஞ்சுவதும்,  

உடன்பிறப்பையே கற்பழிப்பதும்,  

உளசமூகத்தைக் கெடுப்பதும்!  


உணர்வுகளைத் தூண்டுவதும்,  

உதவாக்கரை ஆக்குவதும்,  

உன்னில் மோகமென்பதும்,  

உல்லாசமே தேவையென்பதும்!  




உறவுகளை முறிப்பதும்,  

உதாசீனப்படுத்துவதும்,  

உடலுக்குத் தீங்காவதும்,  

ஊருக்கே கெட்டவனாவதும்!  


உரிமையை மீறுவதும்,  

உரியவளை உதைப்பதும்,  

உடைமைகளை விற்பதும்,  

உழைப்பையே வெறுப்பதும்!  


உழைத்ததை கரியாக்குவதும்,  

உலகத்தையே உலுக்குவதும்,  

உபாதைகள் தஞ்சமென்பதும்,  

"ஊத்திக்கிறேன் கொஞ்சம்..." என்பதும்!  


உளறிய வார்த்தைகளும்,  

உருவாக்கிய விளைவுகளும் 

உன்னால்தான் என்று சொல்லும்...  

அற்பர்களின்

 அறிவு எங்கே?


(டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை)