- பாரதிராஜன்
எனக்கு சிறுவயதிலேயே அதாவது என் 10வயதில் இருதயத்தில் உள்ள "அயோடிக் " வால்வு பழுதானதுஎன்பதை கண்டுபிடித்த டாக்டர் லேட் வைத்தியநாதன், அதன்பிறகு வேலூரைச் சேர்ந்த லேட் டாக்டர் பிரகாசம் ,பிறகு செரியன் ஜூனியர் &சீனியர், கோவை அரசு டாக்டர் முனிரத்தினம் செட்டி, டாக்டர் திருவேங்கடம், டாக்டர் விக்டர் சாமுவேல், தணிகாசலம் பட்டியல் பெரியது. PENIDURE LA 12 ஊசி மாதாமாதம் போட்டுக்கொண்டு காலத்தை ஒட்டினேன்.
இதனிடையே வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவ மனையில் 1977முதல் 1980 வரை வருடாவருடம் டிசம்பரில் மாஸ்டர் செக்அப் கட்டணம் ரூ.50/_மட்டுமே. பிறகு அதுவும் இல்லை. வேலை காரணமாக அரை கி.மீட்டர் நடந்தால் கூட மூச்சு விட முடியாத நிலை.
1995 ஜூலை மாதம் ஸ்டேன்லி மருத்துவ மனையில் ஒரு மாதம் தங்கி ஆன்ஞியோகிராம் எடுப்பதாக சொல்லி எடுக்காமல் வீட்டுக்கு வந்து விட்டேன். தொடந்து மாத்திரை.

2008ல் முதலில் டாக்டர் சிவகடாட்சம் அவர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து மருந்து மாத்திரை. 2010 ஏப்ரலில் மூச்சுவிட முடியாத நிலையில் பாரதிராஜா மருத்துவ மனையில் ஆஞ்சியோ அதனை தொடர்ந்து ஒபன் ஹார்ட் சர்ஜரி, பதம் செய்ய பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டு இன்றுவரை அசிட்ரோம் 2எம்ஜி மாத்திரை வாழ்க்கை.
16/04/2010 சர்ஜரி, 18/04/2010 ல் இரவு 11/00மணி அளவில் பல்ஸ் குறைய அப்போதிருந்த செவிலியர் அமுதா டாக்டர். அவிஜத் பாசுக்கு போன் செய்ய நள்ளிரவில் இரண்டு முறை வந்து என்னை பரிசோதித்த டாக்டர் தான் என் தெய்வம்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}