- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் அப்பா எனக்கு
அப்பா மட்டும் அல்ல!
எனக்குப் பத்தாம் வகுப்பு வரைத்
தமிழ் ஆசிரியரும் கூட!
அப்பாவைக்
கண்ணிலே
கண்ணாடியோடும்
கையிலே பிரம்போடும்
பார்க்கும் போது
மொத்த வகுப்பும்
கப்சிப் என்று
இருக்கும்!

கண்ணில் கண்ணாடி போட்டுப்
பாடம் நடத்தும் போது
கம்பீரமாகத்
தெரிவார்!
பள்ளியிலே
அப்பாவை
Sir என்று தான்
அழைப்பேன் !
காந்திக்கு ஒரு
கண்ணாடி போல்
என் அப்பாவிற்கும்
கண்ணாடி அழகுதான்!
இன்று அவர்
கண்ணாடி
இருக்கிறது!
ஆனால் அவர் இல்லை!
கடந்த 15 வருடங்களாக
அவரது கண்ணாடியை
மட்டுமே நாங்கள்
பார்த்துக்கொண்டு
கண்ணில்
கண்ணீருடனும்
நெஞ்சில்
நினைவுகளோடும்
நாட்கள்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
கடல் ஒரு கவிதை!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
A Tribute to Actor Nagesh: தாய் நாகேஷ்!
தேடித் தேடி...!
{{comments.comment}}