முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

Aug 15, 2026,02:21 PM IST

சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்.


நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.


இவ்விழாவில், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் விஜய் சிறப்பித்தார். முன்னதாக அவருக்கு காவல்துறை அணிவகுப்பு, சிங்கப் பெண் அதிரடிப்படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


கொடியேற்றத்தைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், நாட்டிற்கும் மாநில மக்களுக்குமான தனது முதல் சுதந்திர தின உரையை ஆற்றினார். 




எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது:


இதையடுத்து வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல்வேறு மாநில அரசின் உயரிய விருதுகளைத் தகுதியானவர்களுக்கு முதல்வர் வழங்கி கெளரவித்தார்.


தகைசால்தமிழர் விருது - எம்.கிருஷ்ணசாமி (முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், டாக்டர் அன்புமணி ராமதாஸின் மாமனார்)


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது - மருத்துவர் வி. மோகன் (நீரிழிவு நோய் நிபுணர்)


கல்பனா சாவ்லா விருது - நெளஷன் பானு சந்த் (கோயம்பத்தூர்)


சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்