- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
பாரத பூமி
புண்ணிய பூமி!
நாம் அதில் பிறந்ததில்
அகம் மகிழ்வு அதிகம்!
இன்று கண்டேன்!
சுதந்திர சுவாசம்!
ஆனது அதுவே எந்தன்
மகிழ்ச்சிக் கவசம்!
பொன் ஏடும் காணாத
காவியமோ பாரதம்!
போர் இல்லா உலகைத் தேடும்
புவி மகளோ பாரதம்!

பன்னீரின் வாசம்
நமைச் சுற்றியோ!
பாரதத்தில் பிறந்தது
செய்திட்ட புண்ணியமோ!
இது கண்ணீரே காணாத
பாரத தேசமோ! இனி
எத்தனை பிறவி எடுத்தாலும்
இங்கேயே பிறப்போமோ!
இது இறைவனும் விரும்புகிற
இந்திய நாடோ!
இனி வேறு என்ன வேண்டும்
நமக்கு இது வீடோ!
வருங்காலம் நமதென்று
வாழ்வோமே!
வசந்தங்கள் வாழ்த்துக் கூறும்
நிம்மதி தான் நிச்சயமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}