சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

Aug 15, 2026,02:21 PM IST

- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா


சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது ?

வீரர்கள் குடும்பம் மறந்து நாட்டிற்காக!

சூரர்கள் எதிரிகளை வீழ்த்தி பாதுகாக்க!

விடுதலை வேட்கையில் நாட்டினை காக்க!

வீரம் ஏந்திய துணிவில் எல்லை காக்க!


தூரம் பாராது துவண்டு நிற்க!

பாரம் தாங்காமல் பல மணி காத்திருக்க! 

காரமுணராது கரம் தூக்கி இருக்க!

துன்பம் மறந்து தூங்காது விழித்திருக்க! 




இன்பம் துறந்து இளமையில் வாடி இருக்க !

வன்மை கொண்டு வானவியல் வேடிக்கைக்காக!

தாய்மை உள்ளம் தாங்கி தாய் நாட்டிற்காக !

தூய்மை மனதுடன் துள்ளி ஓடி இருக்க!


வெண்மை நிறத்துடன் பணியில் கரைந்து இருக்க !

மண்ணைக் காக்க விண்ணில் முழங்கிட!

உயிர் தியாகம் செய்து தாய் நாட்டிற்கு பாதுகாப்பை அளித்திட!

அயராது பாடுபட்டு உழைக்கும் பாதுகாப்பு படையினரின் வீர தீர செயல்களால் 

இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது!

பேணிக் காப்போம் பெற்ற சுதந்திரத்தை!


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!

news

தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!

news

ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு

news

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!

news

Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!

news

பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

news

சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி

news

கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்