- சு.தா.அறிவழகன்
"இதயம் முரசு கொட்டுகிறது..." என்ற கவிதை வரிகள் காதலுக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியமான வாழ்வுக்கும் மிகப் பொருந்தும்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. "நமக்கென்ன, இதயம் பாட்டுக்குத் துடித்துக் கொண்டுதானே இருக்கிறது?" என்று நாம் அலட்சியமாக கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், அது நமக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே இந்தத் தினம்.
ஒரு காலத்தில் 'இதய நோய்' அல்லது 'மாரடைப்பு' என்பது 60 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் நோயாகப் பார்க்கப்பட்டது. மாரடைப்பு என்பதே அதிர்ச்சியான நோயாகத்தான் அப்போது இருந்தது. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 25 முதல் 40 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் கூட சர்வ சாதாரணமாக மாரடைப்பால் உயிரிழக்கும் அதிர்ச்சிச் செய்திகளைத் தினமும் செய்திகளில் பார்க்கிறோம்.
உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் இருக்கும்போதோ, கணினி திரையின் முன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதோ திடீரென இதயம் ஸ்தம்பித்து மரணிக்கும் சம்பவங்கள் நம்மைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்துகிறது.
இதற்கு யாரைக் குறை சொல்வது? நோயையா அல்லது நம் வாழ்வியல் முறையையா?

பதில் எளிதானது.. நமது நவீன வாழ்க்கைமுறை தான் பிரதான குற்றவாளி. காலையில் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் வேலை, பாக்கெட் உணவுகள், அதிக உப்பு மற்றும் சர்க்கரை, துரித உணவுகள் அதாவது Fast Food, போதிய தூக்கமின்மை, புகைப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை.. இப்படி எல்லாமே சேர்ந்துதான் நம் இதயத்தைச் சிறுகச் சிறுகச் சிதைக்கின்றன.
நாம் இப்போதெல்லாம் அதிகம் உழைப்பதில்லை. மூளைக்குத்தான் அதிக வேலையைக் கொடுக்கிறோம். உடல் உழைப்பு குறைந்து போய் விட்டது. நடப்பதற்குச் சோம்பேறித்தனப்படுகிறோம்... அப்படிய வாக்கிங் போனாலும் காதுகளில் எதையாவது மாட்டிக் கொண்டு மேலும் மேலும் ஆரோக்கியக் கேட்டையே நாம் வரவழைத்துக் கொள்கிறோம்.. இப்படி இருந்தால் ஆரோக்கியம் எப்படி இருக்கும்!
இதயத்தைப் பாதுகாப்பது ஒன்றும் இமயமலை ஏறுவது போன்ற கடினமான காரியம் அல்ல. சிறிய அளவிலான வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே தேவை.
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, இதயத் தசைகளை வலுவாக்கும். அலுவலகங்களில், பொது இடங்களில் லிஃப்ட்டை விடப் படிகளைப் பயன்படுத்துங்கள். குறைந்தது இறங்கி வருவதற்கு மட்டுமாவது கூட படிகளைப் பயன்படுத்தலாம்.
மன அழுத்தம் இதயத்தின் மிகப்பெரிய எதிரி. யோகா, தியானம், அல்லது உங்களுக்குப் பிடித்த இசை, புத்தகங்களில் மனதைச் செலுத்துங்கள். மனசை ரிலாக்ஸா வைங்க.. ஃப்ரீயா இருங்க.
30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பின் அளவைப் (Cholesterol) பரிசோதித்துக் கொள்வது நல்லது.
நம் உடலின் ஒரே எஞ்சின் இதயம் தான். அது எந்த ஓய்வும் இல்லாமல், நமக்காகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதற்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அதை அன்போடு கவனித்துக் கொள்வதுதான்.
துடிக்கும் இதயத்தைக் காப்போம்; துள்ளலான வாழ்க்கையை வாழ்வோம்!
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}