டெல்லி: இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது நாட்டில் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகளை ஒழித்து விட்டோம். ஆனால் இப்போது அறிவுஜீவி நக்சலைட்டுகள் உருவாகி வருகின்றனர். அவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த விழாவை தொடர்ந்து 2வது ஆண்டாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் புறக்கணித்தனர்.

பிரதமர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
பண்டைய காலத்தில் இந்தியா 'சப்த சிந்து' நிலமாக அறியப்பட்டது. கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாததை, இந்த 'சப்ததாரா' சக்தியின் மூலம் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் சாதித்து காட்டுவோம்.
உற்பத்தி சக்தி - இந்தியா பொருட்கள் தயாரிக்கும் மையமாக மாறுவதோடு, உதிரி பாகங்கள் தயாரிப்பில் இருந்து வடிவமைப்பு வரை முழுமையான உள்நாட்டு உற்பத்தி சங்கிலியை உருவாக்க வேண்டும். தரம் மற்றும் குறைந்த செலவில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய இடம் பிடிக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் - விவசாயத் துறையை மேலும் நவீனப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் - எதிர்கால தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன கண்டுபிடிப்புகளில் உலகளவில் முன்னிலை பெறுவது.
வேகச் சக்தி - வேகமான போக்குவரத்து மற்றும் தடையற்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வேகம் அளிப்பது.
பாதுகாப்புச் சக்தி - பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதோடு, புதிய தொழில்நுட்பங்களுடன் ராணுவத்தைப் பலப்படுத்துவது.
பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் - சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Green Energy) மற்றும் கடல்சார் வளங்களைப் பயன்படுத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது.
மென் சக்தி - இந்தியாவின் கலாச்சாரம், யோகா, ஆயுர்வேதம் மற்றும் ஜனநாயக மதிப்புகள் மூலம் உலக அரங்கில் நாட்டின் செல்வாக்கை அதிகரிப்பது என்று பிரதமர் தனது பேச்சின்போது விவரித்தார்.
"அறிவுஜீவி நக்சலிசம்"

பிரதமரின் பேச்சில் முக்கியமாக இடம் பெற்றது அறிவுஜீவி நக்சலிசம் என்பது குறித்துதான். இதுகுறித்து பிரதமர் பேசுகையில், நமது நாட்டில் ஆயுதம் தாங்கிய நக்சலசித்தை நாம் ஒழித்து விட்டோம். இப்போது நாட்டில் எங்குமே நக்சலைட்டுகள் கிடையாது.
ஆனால் தற்போது புதிதாக அறிவுஜீவி நக்சலிசம் உருவாகி வருகிறது. இது நமது நாட்டுக்கு பெரும் ஆபத்தாகும். இதைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். களையெடுக்க வேண்டும். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பேச்சு பேசு பொருளாகியுள்ளது.
அர்பன் நக்சலிசம் என்ற வார்த்தையை பாஜகவினர் பொதுவாக பயன்படுத்துவார்கள். இப்போது பிரதமர் அறிவிஜீவி நக்சலிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதுகுறித்து பிரதமர் விரிவாகப் பேசவில்லை. இது வரும் நாட்களில் பெரும் விவாதப் பொருளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
{{comments.comment}}