Malliga Selvaraj: அன்னை மடி!

Oct 04, 2026,08:24 AM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


குழந்தையின் சிரிப்பில் 

குதூகலம் கண்டேன்!


நட்பின் நயத்தில் 

நம்பிக்கை கொண்டேன்!


பந்தங்களின் பரிவில் 

பரவசம் கண்டேன்!




மலர்களின் சுகந்தத்தில் 

மனநிறைவு கொண்டேன்!


இமயத்தின் உயர்வில் 

கம்பீரம் கண்டேன்!


மரங்களின் நிழலில் 

களைப்பினைக் களைந்தேன்!


பறவைகளின் ஒலியினில் 

பரவசம் அடைந்தேன்!


இறைவனின் கருணையில் 

ஈர்ப்பினை உணர்ந்தேன்!


இவை அத்தனையையும் 

ஒட்டு மொத்தமாக 

என் தாயின் 

வடிவில் கண்டேன்!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசை படிக்கும் வல்லமை பெற்றவர்!)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்