சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

Aug 15, 2026,02:21 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சாக்லெட்டுக்கு பதிலாக  கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.


விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சாக்லெட்டுகளைத் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பாக வழங்கப்பட்டது.


இப்பள்ளியில் மாணவர்களின் பிறந்தநாளின்போதும் சாக்லெட்டுக்கு மாற்றாக கடலை அச்சு மிட்டாய் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற எட்வின், யாழினி, ரித்திகா, தேவிகா, தட்சணா, கார்த்திகாதேவி, நவீன், விஜயகண்ணன், ஆகாஷ்குமார், சரண் உள்ளிட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மேலும், சபரி, ஸ்டெபி, என்ஜாய், நந்தனா உள்ளிட்ட மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிதை, பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்றனர். மாணவி ஹாசினி முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.


ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்றார். ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.பாரதியார் உட்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் மாணவர்கள் மாறுவேடமிட்டு வந்து அசத்தினார்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்