நம் தாய்மொழி

Su.tha Arivalagan
Aug 10, 2026,04:44 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


தொல்காப்பியர் முகர்ந்த இலக்கண தொன்மை மொழி! 

வள்ளுவர் உரைத்த வான்புகழ் அமுதுமொழி! 

ஔவையும் பாடிய இயற்றமிழான இன்பத் தமிழ் மொழி!

சங்கப் புலவர்கள் நாவில் நளினமான நற்றமிழ் மொழி! 

இளங்கோவடிகளும் ஈன்ற முத்தமிழான மூத்த மொழி!


பக்தி இலக்கியமாக வென்ற பல்லவர் காலத்து பைந்தமிழ் மொழி! 

புரட்சியாய் புதுக்கவிதையாய் புத்துயிர் பெற்ற மகாகவியின் ஆதிமொழி!

பாவேந்தர், மூவேந்தர் பாராட்டி பாடும் பாரின் பழமை மொழி!




அகத்தியர், கம்பர் , கவியாளுமைகள் சீராட்டும் கன்னித் தமிழ் மொழி!

நம் உயிர் நாவில் உருவான பிள்ளை மொழி!


சங்கென முழங்கும் மொழி!

 சரித்திரம் படைத்த மொழி! 

சங்கம் வளர்த்த மொழி!


செங்கோல் ஈன்ற செம்மொழியாம் நம் தாய்மொழி தாய்மொழி!