"அன்னை மொழி அதுவே நம் விழி"
Aug 24, 2026,11:28 AM IST
- டிலாணி ஸ்ரீதரன்
கொச்சை மொழியில் தாய் மொழியை
இச்சையாய் பேசும் பச்சை தமிழனே!
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற முத்தமிழ் வித்தகி ஒளவை மொழி கேளாய்!
சர்ச்சைகள் புரிந்து சங்கத்தமிழை விமர்சித்து
சாதிக்கப் போவதென்ன நீயும் சிந்தித்துப் பாராய்!
பேச்சைக் குறைத்து மூச்சாய் நினைத்திட
பேரும் புகழும் சேரும் ஐயமில்லை உணர்வாய்!
மூர்ச்சை இழந்து வாள் வீச்சாய் வார்த்தைகளை தெளிப்பதை
குறைத்திட இன்பம் காண்பாய்!
தீட்சை பெற்று தீந்தமிழை சுவைத்திட
விதைத்திடும் அனைத்தும் விருட்சமாகும் அறிவாய்!
பரீட்சை தேவையில்லை திருந்தி மனம் வருந்தி பிழை உணர
உலகம் போற்றும் உத்தமனாய்!