இயற்கையின் மடியில்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,01:54 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


உலகத்திற்கே கூரையாய் படர்ந்த வானும்

உள்ளத்திற்கும் உறக்கத்திற்கும் குளிர்ச்சியான நிலவும்!


ஒளிக்கும் விழிக்கும்  விடியலான பரிதியும்!


அரணாக அலங்கரித்து

உலாவும் விணமீனும்!


வெண்பஞ்சாய் நாணத்தில் நடைபழகும் முகிலினங்களும்!


தூவானமாய் பொழிந்து

துணையாகும் மழையும்!




பொதிகையிலிருந்து

தவழ்ந்து சுவாசமாகும் தென்றலும்!


அலைகளாகத் திரண்டு அணிவகுக்கும் ஆழியும்!

வழித்தேடி தொய்வில்லாமல் தொடரும் அருவியும்!


சிகரத்திலிருந்து 

தரையிறங்கி மனங்கவரும்

நீர்வீழ்ச்சியும்!


இச்சையாய் மெய் தீண்டும் பச்சையமும்!


காற்றோடு கலந்து 

கதைப்பேசும் தாவரங்களும்!


இருமாப்பாய் அழகு சேர்க்கும் புள்ளினங்களும்!


"இயற்கையின் மடியில்" அனைத்தும் அற்புதங்களே!


இறைவன் நமக்களித்த

இன்றியமையாத கருவூலங்களே!