செம்மொழியான தமிழ் மொழியே
Sep 01, 2026,10:05 AM IST
- டிலாணி ஸ்ரீதரன்
செந்தாமரை அழகுடையாள் !
செங்காந்தள் நிறமுடையாள்!
செவ்விதழின் தன்மையுடையாள் !
செந்நீரின் வீரமுடையாள்!
செதுக்கலில் கலையுடையாள்!
செப்பிடும் நாவுடையாள்!
செவ்வரத்தை குணமுடையாள்!
செவ்வாழை தண்டுடையாள்!
செந்தேன் சொல்லுடையாள்!
செப்பனிடும் பொருளுடையாள்!
செங்கனிச் சுவையுடையாள்!
செவ்வாயில் உயிர்ப்புடையாள்!
செவ்விள நீரென தாகமுடையாள்!
செழிப்பென
புகழுடையாள்!
செல்வமென நிறையுடையாள்!
செழுமையென வளமுடையாள்!
செந்தமிழென மொழியுடையாள்!
செம்மையான தாய்மொழியானவள்!
செங்குருதியென என்னுள் உறைந்தவள்!