உணர்வில் உயிரான தமிழ்!
- டிலாணி ஸ்ரீதரன்
உயிரில் நுழைகிறான்...
உணர்வாய் உறைகிறான்.....
அன்பை விதைக்கின்றான்...
ஆறுதலாய் இருக்கின்றான்...
நிழலாய் தொடர்கின்றான்....
நிம்மதியை தருகின்றான்....
பாசத்தை பொழிகிறான்...
பாராட்டுகளை தருகின்றான்...
பேச அஞ்சுகிறான்...
பேசினால் மிஞ்சுகிறான்...
வங்கத்து மீனவன்...
வருடலில் பீலியவன்....
எண்ணத்தில் நிற்பவன்....
எளிமையை விரும்புபவன்...
கவிதைகளின் மொழியவன்...
கதைகளின்
கலையவன்....
எழுத்தாணி பிடிப்பவன்...
எதுகை மோனையின் ஏவலவன்...
எட்டயபுரத்தானும் எடுத்து சூடிக் கொண்டவன். ...
எண்ணற்ற எழுத்துகளின் கோர்வையவன்....
இதயத்தை வரிகளால் திருடுபவன்....
இம்சையான கொஞ்சலின் அரசனவன்....
புல்லாங்குழலில் சுவாசமான இசையவன்.....
புரிதலின் புதிய விளக்கமவன்.....
புதுக்கவிதையாய் வந்தவன்....
புரியாத புதிராக நின்றவன்....
புலம்பலைத் தந்தவன்...
புதுராகம் இசைப்பவன்...
புனிதமான உறவவன்...
புகழை அளிப்பவன்....
மூன்றாம் விரலை விரும்புபவன்....
மூச்சாக என்னுள் இருப்பவன்....
அகந்தையில்லாத அழகு வடிவினன்....
ஈகையில் ஈசனை மிஞ்சிய வன்....
தன்னில் வலிகளை நிறைத்தவன்....
தடம்புரளாத ஆண்மையவன்....
பிறவியொன்று வேண்டுமென்று கேட்பவன்....
பிரியாத உறவாய் அணைக்கத் துடிப்பவன்....
பிள்ளையாய் கையிலேந்த வேண்டும் அவனை.....
பிஞ்சு முகம் பார்த்து கொஞ்ச வேண்டும்
நித்தமும் அவனை....
என்னுள் நிறைந்தவன் ...
எங்கே போனானவன்...
கண்ணும் தேடிட
கடிகாரமும் சுழலவில்லை.....
யாரவன் யாரவன்...
யாவருக்கும் பொதுவானவன்...
எடுத்து சுவாசித்திட எண்ணங்களில்
நிறைந்த சங்ககாலத்தின்
தமிழ் அவன்!!!!