- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
இனிய மொழியாம் எமது தமிழ் மொழி ..!!
இந்திய அரசு அறிவித்த முதல் செம்மொழி..!!
திராவிட மொழிகளில் முதன்மை மொழி ..!!
தேசிய மொழிகளில் தமிழ் முக்கிய மொழி..!!
அகத்தியன் தொட்டிலிட்டு ,தொல்காப்பியன் தாலாட்டி ,
கம்பன் சீராட்டி ,வள்ளுவர் பாராட்டி, வளர்ந்த மொழி..!!
என்றும் இளமை குன்றா கன்னிமொழி..!!
எமது தொன்மை வாய்ந்த தேன்மொழி..!!
எம் தமிழ் மொழி ஒரு அதிசய மொழி ..!!
எத்தனை ஆழகு சொற்கள் எம் தமிழ் மொழியில்..!!

எத்தனை இலக்கியச்சொற்கள் எம் செம்மொழியில்..!!
என்ன சொல் இல்லை என் தாய்மொழியில்..!!
முச்சங்கங்கள் அமைத்து வளர்க்கப்பட்ட உயர்மொழி..!!
முத்தமிழ் இணைந்த முழுமொழி எம்மொழி..!!
உள்ளத்து உணர்வை உணர வைக்கும் உயர்மொழி..!!
உலகின் மிகப் பழமையான தொன்மை மொழி..!!
தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் இல்லை..!!
தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை, எனப் பொருள்..!!
என்றும் மாறாத இலக்கணக் கோட்பாடுகள் ..!!
எழுதுவதைப் போன்றே உச்சரிக்கும் ஒரே மொழி..!!
எம் தாய்மொழி பாடல்களை கேட்கும் பொழுதில் ,
எம் செவிகளில் தேன் வந்து பாய்கிறது..!!
தாய் தமிழ் மொழியோடு பயணிக்கும் போது ,
தாயின் மடியில் தலை சாய்த்த ஒரு உணர்வு ..!!
ஒவ்வொரு பொருளுக்கும் எத்துணை சொற்கள் தமிழில்..!
ஓராயிரம் மொழிகளில் தமிழுக்கு இணை உண்டோ..!!
நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருள் மொழி..!!
நெஞ்சமெல்லாம் நிறைந்த நிகரற்ற மொழி..!!
இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் பொதிந்த மொழி ..!!
இனிமை தமிழ் மொழி எம் தாய்மொழி ..!!
எக்காலத்தும் கவின்குன்றா எம் தமிழ் மொழி..!!
ஏற்றமிகு தமிழே ,செந்தமிழே, தமிழுக்கு நிகர் தமிழே..!!
ஆட்சித்தமிழ், முத்தமிழ், தனித்தமிழ் ,தேன்தமிழ், நற்றமிழ் ,
அறிவியல் தமிழ், என பன்முகப்பரிமாணம் கொண்ட,
இனிமை மங்காத தமிழ் என சங்கே முழங்குவோம்…!!
வாழ்க தமிழ்மொழி..!! வளர்க செம்மொழி..,!!
வாழிய வாழியவே..!!
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)
என் மகிழ்ச்சியின் ஆணிவேர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
இனிமைத் தமிழ் மொழி எமது
புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!
ஆடி வெள்ளி மட்டுமல்ல.. பூரமும் கூட.. இன்றைய நாளின் சிறப்புகள்!
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
{{comments.comment}}