மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
எப்போதும்
புது முகமாகத்
தோன்றும்
உன் பூ முகம்
ஒரு நாள் சற்றே லேசாக
வாடி இருந்தால் கூட
என் முகம்
வதங்கி விடுகிறது!
சற்றே தலைவலி
என்று நீ கூறினால் கூட
என் உள்ளம்
கருகுகிறது!
மனம்
பதை பதைக்கிறது!
இதயம்
துடி துடிக்கிறது!
உன் நலத்தையே
நாளும்
என் மனம்
நாடுகிறது!

உன்னைப் பற்றி
நான் எழுதும்
கவிதையில்
கண்ணீர் கசிகிறது!
உனது உடல் நலம்
தேறும் வரை
எனது மனநலம்
தவிப்பாய்த் தவிக்கிறது!
உனது உடல்நலம்
சரியானால் தான் எனது
நாட்காட்டி இயல்பு
நிலையைக் காட்டுகிறது!
எனக்கு என்னவோ
நம் ஈருயிரும் ஓர் உயிராய்
இணைந்த
வாழ்க்கையில்
என் மகிழ்ச்சியின்
ஆணிவேர்
அஸ்திவாரம்
எல்லாம் நீ தான்!
உனக்காக இறைவனிடம்
உரிமையோடு
வாக்குவாதம்
செய்கிறேன்!
இருக்கிறோம்
நலமாக!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
{{comments.comment}}