ஆடி வெள்ளி மட்டுமல்ல.. பூரமும் கூட.. இன்றைய நாளின் சிறப்புகள்!

Aug 14, 2026,12:05 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையான இன்று ஆடிப்பூரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்டாள் அவதார நாளாகவும், அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா நடத்தும் சிறப்பு நாளாகவும் அனைத்து கோவில்களிலும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 


தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் நிகழும் நாள் அன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆடிப்பூரம் அம்மனின் பிறப்பைக் கொண்டாடும் விழாவாக விளங்குகிறது.


ஆண்டாள் அவதார நாள் - ஆண்டாள் ஜெயந்தி:


ஆடிப்பூரம் வைணவ சமுதாயத்தில் உள்ள 12 ஆழ்வார் துறவிகளில்  ஒருவரான ஆண்டாளின் பிறந்த நட்சத்திரம் பூரம் என்பதனால் இந்த நாள் "ஆண்டாள் ஜெயந்தி" என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய ஆழ்வாரால் நந்தவனத்தில் துளசி செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்ட பெண்  குழந்தையே ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் நேரடி அவதாரமாக போற்றப்படுகிறார்.


இளம்பெண்ணாகிய ஆண்டாள் இறைவன் விஷ்ணுவை தன் காதலனாக தேர்ந்தெடுத்து தன்னுடைய பக்தியால் புனிதம் அடைந்தாள். ஆண்டாளின் பக்தி விசுவாசம் மற்றும் இறைவன் மீது அவர் கொண்டுள்ள அன்பு, பக்தி தமிழர் சமுதாயங்களில் ஒரு முக்கியமான இடத்தை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.


வழிபாட்டு சிறப்புகள் :




ஆடிப்பூரம் பண்டிகை பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கும், அவரவர் குடும்ப நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆண்டாளின் ஜெயந்தியாக கொண்டாடப்படும் ஆடிப்பூரம் பக்தர்கள் இறைவன் மீது கொண்ட பக்தியையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான வாய்ப்பாகும். இந்த நாள் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு தங்கள் வாழ்க்கையில் நலனும், நலமும், வளமும் பெறுவதற்காக மனதாரப் பிரார்த்தனை செய்கின்றனர்.


இந்த நாள் தமிழகத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அலங்காரங்களுக்கு பல வகையான பூக்கள், பழங்கள், கண்ணாடி வளையல்கள்,மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்கள் வாங்கிச் செல்வது  சிறப்பு.


முக்கிய சிறப்புகள்:


ஆண்டாள் ஜெயந்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த நாளாக வைணவத் தலங்களில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உமாதேவி எனப்படும் சக்தியாக அம்பாள் உலகை காக்க அவதரித்த தினமாக இந்த ஆடிப்பூர நாள் நம்பப்படுகிறது.


வளைகாப்பு விழா:


அம்மனுக்கு சீதனமாக வளையல்கள் சாற்றி வளைகாப்பு வைபவம் பல கோவில்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அம்மனுக்கு கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்து, கண்ணாடி  வளையல்கள்  மாலை அணிவித்து, வளைகாப்பு நடத்தப் பெற்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 


அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை பெண்கள் அணிந்து கொள்வதனால் குடும்ப நலம், குழந்தை பாக்கியம் மற்றும் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை பெறுவது பக்தர்களுக்கு செல்வத்தையும், மங்கலத்தையும் தரும். 


திருப்பாவை பாராயணம்:


வைணவ கோவில்களிலும், இல்லங்களிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போன்ற  வைணவ திருத்தலங்களில்  ஆண்டாள் திருக்கல்யாணமும், திருப்பாவை பாராயணங்களும் விமர்சையாக நடைபெறுகிறது .


ஆடிப்பூர திருநாளான இன்று திருமண பாக்கியம் வேண்டுபவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், அம்மன் அருள் கட்டாயம் கிடைக்கும். அனைவர் வாழ்விலும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று சிறப்பாக வாழ்வோமாக.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!

news

ஆடி வெள்ளி மட்டுமல்ல.. பூரமும் கூட.. இன்றைய நாளின் சிறப்புகள்!

news

Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!

news

புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!

news

சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

அதிகம் பார்க்கும் செய்திகள்