- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமையான இன்று அமாவாசை திதி அமைந்துள்ளது. அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணமும், குலதெய்வ வழிபாடும் செய்வது சிறப்பு. ஆடி அமாவாசை யான இன்று அம்மன் வழிபாடு செய்வது அதீத சிறப்பு.
நேரம்:
ஆடி அமாவாசை :
அமாவாசை திதி : ஆகஸ்ட் 12 புதன்கிழமை அதிகாலை 02 :11 மணிக்கு துவங்கி ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை அதிகாலை 12 :16 மணிக்கு முடிவடைகிறது.
அமாவாசை தர்ப்பணம் :

ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வந்து அவர்களுடைய சந்ததியினருக்கு ஆசிகள் வழங்குவார்கள் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகள் செய்து அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், மக்கள் வீடுகளில் படையல் போட்டு வழிபாடுகள் செய்வது வழக்கம்.
இத்தகைய வழிபாடுகள் செய்வதனால் பித்ரு சாபம் மற்றும் தோஷம் நீங்கி அவற்றிலிருந்து விடுபடவும் அவரவர் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள், தடைகள், கஷ்டங்கள் நீங்கி, சுப நிகழ்வுகள் நடைபெறும் என்பதும் ஐதீகம்.
சக்தி வாய்ந்த நாள் :
ஆடி அமாவாசை என்பது தென்னிந்தியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும்.ஒவ்வொரு வருடமும் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். முன்னோர் வழிபாடு செய்ய அவர்களுடைய ஆசி பெறுவதற்கும், முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக அமைந்துள்ளது.
சில குடும்பங்களில் நீர் நிலைகள் உள்ள இடங்களுக்குச் சென்று எள் மற்றும் பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தில் தொடக்கம் இது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலமாகும். எனவே இந்த தட்சிணாயன காலத்தின் முதல் அமாவாசை என்பதால் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
சிறப்பான நாள்:
ஆடி அமாவாசையில் சூரியன் (சிவன்) மற்றும் சந்திரன் (சக்தி) ஒன்று சேர்வார்கள்.இதனால் சந்திரனின் சக்தி அதிகமாக இருக்கும். அன்று முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து அவர்களுடைய சந்ததியினருக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள். இத்தகைய வழிபாடுகள் செய்வதனால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஈரோடு பவானி கூடுதுறை போன்ற இடங்களிலும் ராமேஸ்வரம் போன்ற கடல் மற்றும் நதிகள் உள்ள இடங்களில் மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதி கொடுத்து பித்ரு கடன் நிறைவேற்றுகிறார்கள். ஹோமம் வளர்ப்பார்கள். இதனால் கெட்ட சக்திகள் விலகி நல்ல சூழ்நிலை நிறைந்த நேர்மறை ஆற்றல் நிலவுகிறது.
தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வந்து குல தெய்வத்தை மனதார நினைத்து விளக்கேற்றி, படையல் இட்டு வழிபாடு செய்வது சிறப்பு. இந்த நாள் தான தர்மங்கள் செய்ய உகந்தது. பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுப்பது சிறப்பு. படையலில் வைத்த உணவு முதலில் காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு வீடுகளில் இருப்பவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறுவது சிறப்பு. அமாவாசை அன்று விரதம் இருப்பவர்கள் பூஜை முடிந்ததும் உணவு உட்கொள்வது சிறப்பு.
தானம்:
அவரவர் வசதிக்கு ஏற்ப தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்வது சிறப்பு.ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு செலவிற்கு உதவுவது நன்மை பயக்கும். மழைக்காலங்களில் அவர்களுக்கு குடை மற்றும் போர்வை வாங்கிக் கொடுப்பது சிறப்பு. முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்வது சிறந்தது.
ஆடி அமாவாசை அனைவருக்கும் முன்னோர்கள் ஆசியும், குலதெய்வ அருளும் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
தேவைக்குப் பயன்படுத்துவோம்.. தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம்!
எது சுதந்திரம்?
துரோகம்!
பெண்களை இழிவாகப் பேசாதே ஆண்களே
ஆடி அமாவாசை மாதமும், அதன் சிறப்புகளும்!
தவெக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தனி தீர்மானம்: ஆதரவு யார்? எதிர்ப்பு யார்?
சென்னையில் சொத்து வரி கிடுகிடு உயர்வா.. மாநகராட்சி தரும் விளக்கம் என்ன?
தொகுதி மறுவரையறை: சட்டசபையில் தமிழக அரசு தனித் தீர்மானம்
போதும் காற்றே உன் பேச்சை நிறுத்து!!
{{comments.comment}}