மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

Sep 27, 2026,01:19 PM IST
- மும்மொழிக்  கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசாமி 

செல்லக் கிளிகளாய்ச்
செவ்வந்திப் பூக்களாய்த்
தந்தையின் கரம் பற்றிச்
செல்லும் மகள்களைப்

பார்க்கும் பொழுதெல்லாம்,
"நமக்கு ஒரு மகள் இல்லையே இப்படி"
என்ற ஏக்கம்,
சிந்தையில்
வந்து வந்து போகும்!

பட்டிமன்றங்களில்
தொலைக்காட்சிப் பெட்டிகளில்,
அப்பாவைப் பற்றி
சிலாகித்துப்  பேசும்

மகள்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்,
"நமக்குப் பூர்வ ஜென்ம புண்ணியம்
குறைவோ" என்ற தாழ்வு மனப்பான்மை
எம்மை நொந்து நொந்து போகச் செய்யும்!





கடைசியில் கடவுள்
கருணை காட்டினான்!
மகள் இல்லாக்
குறையைப்போக்க வந்தாள்
மருமகள்!

அலைமகள் கலைமகள்
போல் வந்த பூமகள்
எம் வீட்டு மருமகள்!
இந்தத் திருமகள்
மலைமகள்
பொறுமையில் ஒரு
நிலமகள்!

பாசத்தில் தலைமகள்! 
பெரியோரை மதிப்பதில்
நல்லதொரு குலமகள்!
இனி கடவுளுக்கு நன்றி சொல்வதைத் தவிர,
வேறென்ன வேண்டும் எனக்கு?
இறைவா!
உனக்குக் கோடான கோடி நன்றிகள்

(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்