- வே. ஜெயந்தி
அஞ்சி நீ வாழ்வதும்,
கோழைத்தனம் கொள்வதும்
உன் வாழ்வின் வழியல்ல;
இழந்து விடாதே பெரும்பதம்.
காதலை நெஞ்சில் வைத்து,
அன்பெனும் மூன்றெழுத்தை
ஆயுள் முழுதும் சுமந்து வாழ்ந்தால்,
அடைந்திடுவாய் பெரும்பதம்.
உலக மக்களின் துயர் கண்டு,
ஞானத்தின் ஒளியால்
அவர்களின் கண்ணீரைத் துடைத்து,
அடைந்திடுவாய் பெரும்பதம்.
தைரியமும் அன்பும்,
கருணையும் பணிவும்
கைகோர்த்து நடந்திடும் பாதையே
மனிதன் அடையும் பெரும்பதம்.

பிறர் நலனில் உன் நலம் காணும்
பேருள்ளம் கொண்டவரே,
அழியாத பெரும்பதம் பெறுவாய்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}