- மீனா கணேஷ்
இனியவனே எழுந்திரு
புலர்ந்திடும் இந்தப் பொழுது
உனக்காகத்தான் . . . .
துணிந்தவனே துணைக்குவா
உன் இடர்களை களைந்து
வீர நடை போட்டு வா . . . .
அன்பானவனே
அதிர்ந்த நடையோடு
அனைத்திலும் எழுந்துவா . . .
நட்பானவனே
அத்தனையிலும்
துணையிருக்கிறேன் வா . . .
புதிதானவனே
புன்னகையில் வெற்றியைக்
கொண்டு வா . . .
தோழனே தோல்வி உனக்கில்லை
தோழமை இன்னும் கிடைக்கும் வா
தோற்காது வா . .

விமர்சிக்க முடியாதவனே
எந்த விமர்சனத்திலும்
அடங்காது உன் வெற்றி
அதனால் இன்னும்
விரைந்து வா . . . .
வரிசை கட்டி நிற்கும்
தீபங்கள் உனக்குள்ளும்
நின்று வெற்றி ஒளியை வீசட்டும்
புத்தொளியாய் புறப்பட்டு வா . . .
இன்னல்கள் நீங்கி
இன்முகத்தோடு வா
தொடரட்டும் உன்
வெற்றிப் பயணம்
தொடர்வேன் நானும் . . . . .
இந்த உலகத்தில் உனை
ஒப்பிட்டு பார்ப்பதற்கு
ஒன்றுமில்லை வா . . . . . !
(திருநெல்வேலியைச் சேர்ந்த மீனா கணேஷ், கவிஞர், சிந்தனையாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர்)
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
Monday Motivation: மாயமான பண்புகள்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
மயங்காத தமிழ்!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
{{comments.comment}}