- ஸ்வர்ணலட்சுமி
புரட்டாசி மாதம் வந்தாலே அசைவ பிரியர்களுக்கு அசைவத்திற்கு நிகரான உணவை சமைத்துக் கொடுப்பதே ஒரு சேலஞ்ச் தான் இல்லையா? ஃபிரண்ட்ஸ்!.
புரட்டாசி ஞாயிற்றுக்கிழமைகளில் சைவ - அசைவ போராட்டம் தான் புரட்டாசி விரதம் இருப்பவர்களுடைய
அதுவும்,அசைவ உணவு விரும்பி சாப்பிடும் வீட்டில் நடக்கிறது.
நேற்று புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை ஸ்வப்னா & நிவின் (15 வயது) வீட்டிலும் இதுதான் நடந்தது. நிவின் காலையிலிருந்து அம்மா எனக்கு மட்டன் கோலா உருண்டை கட்லெட் போல வேண்டும். .. என்று ஒரே அடம்! கண்ணே.. புரட்டாசி மாதம் ஒரு மாதம் பொறுத்துக்கொள். இரண்டு சனிக்கிழமை பூஜை முடித்து விட்டேன். இன்னும் மூன்று வாரம் தான் கண்ணே.. என்று கொஞ்சி விட்டு ( மகன் நிவினை ) சமாதானம் செய்தாள்.

பூஜை முடிந்ததும் உனக்கு நான் செய்து கொடுக்கிறேன் என்று அவனுக்கு அன்பாக ஒரு முத்தம் வைத்து கூறினாள் . ஆனால் அவன் எனக்கு இன்றே இப்பவே வேண்டும் என்று ஒரே அடம். சட்டென்று ஸ்வப்னாவுக்கு ஒரு ஐடியா வந்தது. பட்டென்று அவளுக்குள் பல்பு எரிய.. சடாரென்று இந்த ரெசிப்பியை முயற்சி செய்தாள்.
"எங்கள் வீட்டில் செவ்வாழைப்பூ இருந்தது. அதை வைத்து இந்த ரெசிபி ட்ரை செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்கள் ஃப்ரெண்ட்ஸ்" என்று சொன்ன ஸ்வப்னாவின் ரெசிப்பியை உங்களுக்கும் சொல்கிறேன்.. நீங்களும் செஞ்சு பாருங்க.
வாழைப்பூ கோலா கட்லெட் :
தேவையான பொருட்கள்:
1 . வாழைப்பூ - 50 இதழ்கள் (நன்றாக கழுவி,சுத்தம் செய்து நடுவில் இருக்கும் நரம்பை எடுக்கவும்)
2 . பொட்டுக்கடலை (வறுகடலை)- ஒரு கப்.
3. சோம்பு - 1/2 ஸ்பூன்.
4 . இலவங்கம் &பட்டை தலா 2.
5. சிறிது மல்லித்தழை , ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
6. வர மிளகாய் இரண்டு (காரத்திற்கு ஏற்ப ).
7. உப்பு தேவைக்கு ஏற்ப.
குறிப்பு: உப்பு சிறிது குறைவாக போட்டுக் கொள்ளவும்.

8. இவை அனைத்தையும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும் .9. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பிறகு பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்க்கவும்.
10. சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கட்லட் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
11..சிறிய கடாயில் எண்ணெய் வைத்து டீப் ஃப்ரை செய்யவும்.
பிறகு சர்விங் பிளேட்டில் மாற்றி நிவின் இடம் கொடுத்தேன். சூடாக சாப்பிட அம்மா மட்டன் கோலா கட்லெட் போலவே இருக்கிறது என்று ருசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு அவன் அப்பாவிடம் ஓடிச் சென்று அவருக்கும் இரண்டு கொடுத்தான். அவரும் ஸ்வப்னா மிகவும் நன்றாக உள்ளது என்று பாராட்டினார். மட்டன் கோலாவிற்கே டஃப் கொடுக்கிறது என்றார். நிவின் உடனே ஸ்வப்னாவிடம் ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமிட்டான். "My mom is always the best" என்று கூறினான்.
இந்த கால குழந்தைகளுக்கு அவர்களுடைய டேஸ்ட்டுக்கு தகுந்தாற்போல் சமைத்துக் கொடுப்பதே ஒவ்வொரு அம்மாவிற்கும் சேலஞ்சாக உள்ளது.
என்னங்க நீங்களும் செஞ்சு பார்த்து நல்ல மம்மின்னு பேரு வாங்குங்க!
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
{{comments.comment}}