மதுரை:தமிழக முதலமைச்சர் விஜய், அரசு சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று மதுரையில் முதல்வர் விஜய் துவக்கி வைத்துள்ளார்.
தென் மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் தொடக்க விழாவிற்காக மதுரை வருகை தந்த முதலமைச்சருக்கு, மதுரை விமான நிலையத்தில் அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை விமான நிலையத்தில் இருந்து, ராஜாஜி அரசு மருத்துவனை வரை முதல்வர் விஜய் ரோடுஷோ நடத்தினார்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்:

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சமூக நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்து பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினார்.
மதுரையில் பலத்த பாதுகாப்பு:
முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் விழா நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால், மதுரை விமான நிலைய வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
{{comments.comment}}