அ.சுபாலட்சுமி
என்றோ ஒர் நாள் வீட்டில் திண்று போட்ட நாவல்பழ கொட்டை ஓர் தொட்டியில் தவறி விழுந்தது. சிறிது காலத்தில் இயற்கையின் உதவியால் (மழை) அந்த விதை ஓர் மரமாக முளைக்க தொடங்கியது (அங்கே யாரும் தனியாக இல்லை, பிரபஞ்சம் உடன் இருந்து உதவுவதை கண்டேன்).
வீட்டில் யாரும் அந்த மரத்தை கண்டுகொள்ளவில்லை. பல காலங்களாக அந்த மரம் அதற்கு கிடைத்த சிறிய இடத்தில் வேரூண்றி கூட போக வழி இல்லாமல் தனக்கு கிடைத்த ஓர் தூவாரம் வழியாக தொட்டிக்கு அடியிலும் வட்டமாக படர்ந்திருந்தது. (அங்கே தனக்கு கிடைத்ததை வைத்து வாழ்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன்).
பின்பு ஓர் நாள் நான் அந்த மரத்தினால் இனி பயணில்லை என்று அந்த மரத்தை பிடுங்க முயற்சித்தேன். மண்ணையும் தோண்ட ஆரம்பித்தேன். பல மாதங்களாக நீர் இல்லாத காரணத்தினால் மண்ணும் தோண்ட எளிதாக இருந்தது. ஆனால் மரத்தின் வேர் மகவும் பலமாக இருந்தன. (அங்கே வேரின் வலிமையை கண்டேன்).

நானும் பல மணி நேரமாக முயற்சித்து கொண்டிருந்தேன். ஓர் கட்டத்தில் மண்ணின் இருக்கத்தை கண்டேன் காரணம் அந்த வேர். இருப்பினும் என் முயற்சியை கைவிடவில்லை. வெகுநேர போராட்டத்திற்குப் பின்னும் வேரை எடுக்கமுடியவில்லை. பிறகு சிறிது நீர் ஊற்றினேன், வேர் கையோடு வந்தது.(நமக்கு வேண்டியது கிடைத்தால் ஏமாறுவது மனிதன் மட்டுமல்ல மர வேரும் தான் என்று புரிந்தது).
அதற்கு பிறகுதான் அங்கே ஓர் அற்புதத்தை கண்டேன். ஆம், அது தான் அங்கிருந்த எறும்பு கூட்டம். (அங்கே எறும்புகளின் ஒற்றுமையை கண்டேன்). அங்கிருந்த ஆபத்தை உணர்ந்த பெரிய எறும்புகள் அங்கு நகர முடியாமல் , இன்னும் சொல்லப்போனால் இன்னும் இந்த உலகத்தை காணாத பல எறும்பு முட்டைகள் மற்றும் எறும்பு குஞ்சுகளை அந்த பெரிய எறும்புகள் பாதுகாப்பாக எடுத்து சென்றன.
அங்கே எறும்பின் சுறுசுறுப்பையும் ஆபத்து காலத்தில் சுயநலமில்லாமல் பொதுநலத்துடன் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
விண்ணாய்ப் பரந்தும் விரிந்தே இருப்பவள்
பிளாட்டினம்
Monday Motivation: மாயமான பண்புகள்!
{{comments.comment}}