- முனைவர் தி. தங்கலட்சுமி
பண்டு பண்டு இருந்த பண்புகள்
இன்று இன்று எங்கு சென்றதோ?
நாகரிகம் என்ற பெயரிலே
நசிந்து நலிந்து நா(மா)றிப் போனதோ?
இல்லங்களின் வாயில் நிலை தாழ்ந்திருந்த போதிலே,
உள்ளங்களின் நிலை உயர்ந்து நின்ற மானிடா...
உன் பணிவு எனும் மரியாதைப் பண்புகள்
பெரியோரை மதித்திடும் மாண்புகள்
மக்கிப்போன கரையிலே, தரைதட்டிக் கவிழ்ந்த கப்பலாய்...
நிலைதடுமாறி நீயும் திசைமாறிப் போனதெங்கே?

உந்தன் பாட்டன் முப்பாட்டன் கட்டிய
இல்லங்களின் உள் நுழையும் ஒவ்வொரு வேளையிலும்
உனையறியாத கவனமெனும் குனிவுகளால்
பணிவு எனும் பண்பைக் கற்றாய்!
என்று உன் இல்லங்களின் வாயில் நிலை உயர்ந்ததோ...
அன்றே நின் நிலை தாழத்துவங்கிவிட்டதடா!
மண்ணில் விளைந்த தானியத்திற்கு மரியாதை நல்கிட
தரைபார்த்துத் தலை கவிழ்ந்து அன்னம் உண்டாய்!
விண்துளியின் அமுத விருந்தை அருந்தும் வேளையிலே
தலை நிமிர்ந்து நீர் பருகினாய்!
பெரியோரிடம் கற்ற நற்பண்புகளை மறந்தனை
பசித்திருந்த பலபல நோய்களுக்கு
உனையே விருந்தாக்கினை!
மூன்றாம் உலகப் போரிலா!!!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
பிளாட்டினம்
Monday Motivation: மாயமான பண்புகள்!
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
{{comments.comment}}