- பசுங்கிளி
உறவுகளில் மிக உன்னதமான உறவு தாய், தந்தை. ஒரு தாயானவள் தன் குழந்தையை கருவிலிருந்தே ஒவ்வொரு நாளும் பார்த்து வளர்த்து வருகிறாள். தனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன் கருவில் உள்ள குழந்தை நன்றாக வளர வேண்டும் என்று 10 மாதம் மிக கவனமுடன் இருப்பாள். பெண்களுக்கு பிரசவம் மறு பிறவி என்பார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அந்த தாய்க்கும் தந்தைக்கும் உலகமே தம் கையில் வந்தது போல் ஒரு மகிழ்ச்சி. தன் உதிரத்தை பாலாக்கி தன் குழந்தைக்கு ஊட்டுவாள். இரவும் பகலும் கண் விழித்து தாலாட்டி பாலூட்டி சீராட்டி வளர்ப்பாள். தந்தை பணிக்கு சென்று சோர்வாக இருந்தாலும் தன் குழந்தையை தோள் மீதும் மார் மேலும் போட்டு தாலாட்டுவார்.
குழந்தை சிரிக்கும் போதும் தவழும் போதும் நடக்கும் போதும் மகிழ்பவர்கள். முதலில் தாய் தந்தை தான் நடக்கும் போது, நம்மை கை பிடித்து கற்று தருபவர்கள் தாயும் தந்தையும் தான். நம்மை பள்ளிக்கு அனுப்பி அழகு பார்ப்பவர்கள் தாய் தந்தை. ஒரு குழந்தை பசி என்று கேட்காமலே புரிந்து கொண்டு உணவளிப்பாள் தாய்.

தன் குழந்தைக்கு வேண்டியதை கேட்காமலே வாங்கி கொடுப்பார் தந்தை. தன் குழந்தைக்கு சிறு வயதிலே நல்ல பண்பு ஒழுக்கம், பாசம் மரியாதை அனைத்தையும் கற்றுக்கொடுத்து இந்த சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக
உருவாக்குகிறார்கள். தன் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தன் குழந்தை அருகில் அழைத்து தலையை வருடி எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை கொடுப்பாள் தாய்.
தந்தை நான் இருக்கேன் வருத்தப்படாதே என்று சொல்லி தன் குழந்தைக்கு தோள் கொடுப்பார். ஒரு தந்தைக்கு பெண் குழந்தையின் மீது அளவுக்கு மீறிய பாசம் இருக்கும். தன் குழந்தையை ஒரு தாய்க்கு நிகராக பார்ப்பார்கள். இன்றளவும் தென் மாவட்டங்களில் பெண் குழந்தையை தாயி என்று அழைப்பார்கள். தாய்க்கு தன் மகன் மீது பாசம் அதிகமாக இருக்கும். தன் மகன் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழனாக நினைப்பாள்.
தன் மகன் தன்னோடு வரும் போது கம்பீரமாக நடப்பாள். தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அந்த தாயும் தந்தையும் தன் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன் குழந்தைகளுக்காக அத்தனையும் சமாளித்து தன் பிள்ளைகள் வாழ்க்கை ஒன்றே நம் லட்சியம் என்று நமக்காக வாழ்பவர்கள்.
அப்படி வளர்த்த தாய் தந்தையை கடைசி காலத்தில் நாமும் நன்றாக பார்ப்போம். நாம் அனுப்பும் பணமோ, பொருளோ அவர்களை சந்தோசப்படுத்தாது. முடிந்தவரை அருகில் இருந்து பார்த்து கொள்வோம். பணியின் காரணமாக பிரிந்து இருப்பவர்கள், தினமும் தொலைபேசியில் பேசலாம். நம் குரலை கேட்க நம் தாய் தந்தை
மனம் ஏங்கும். முடிந்தவரை தாய் தந்தைக்கு அன்பை கொடுப்போம். அன்பே சிவம் தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
திருச்சிற்றம்பலம்
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
{{comments.comment}}