- சிவ.ப.மாலதி ராஜாராம்
விநாயகர் துதி
ஆனைமுகனே கணபதி பதினே!அடியவர் துயர் தீர்க்கும் தேவா! ஞானக் கொழுந்தே! கணேசம் பெருமானே!நலம் யாவும் தந்தருள்வாயே!!
சிவபுராணம் தொடர்ச்சி
இங்கு போற்றி என்னும் சொல்லுக்கு வணக்கம்அல்லது வந்தனம் என்று பொருள் படும்
11• ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
எல்லாமாக விளங்கக்கூடிய எம்பெருமானின் திருவடிக்கு வணக்கம், என்னை ஆட்கொண்ட என் தந்தையின் திருவடிக்கு வணக்கம்
12• தேசன் அடி போற்றி!சிவன் சேவடி போற்றி!
இவ்வுலகில் ஒளிக்கு மூலமாக உள்ளவன் ஆன இறைவனது திருவடிக்கு வணக்கம்,,சிவன் திருவடிக்கு வணக்கம்,

13• நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
நேயத்தே__ என் மனதின் உள் நின்ற நிமலா_மாசு இலாலாதவன்_( குற்றம்) அணுக முடியாத எம்பெருமான் திருவடிக்கு வணக்கம்
14• மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி! நிலையில்லாத மாயப்பிறப்பு என்னும் தொடரை அறுத்து ஆட்கொள்ளும் எம் அரசனின் திருவடிக்கு வணக்கம்
15•சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி__
சீர் மிகுந்து விளங்கும் திருப்பெருந்துறையில் உள்ள எம் தேவனது திருவடிக்கு வணக்கம்,,
16•ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
அள்ளி பருக பருக தெவிட்டாத இன்பம் அருளும் மலை போன்றவனுக்கு வணக்கம்
17• சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
பெருமான் ஆகிய இறைவன் எனது நெஞ்சில் நிலைத்து இருந்த அதனால்
18• அவன் அருளாலே அவன் தாள் வணங்கி_ அவனுடைய அருளால் அவன் தாள் வணங்கி, (இறைவனுடைய அருள் இருந்தால் மட்டுமே நாம் அவனை முதலில் சிந்தையில் ஏற்ற முடியும், சிந்தையில் ஏற்றியதன் காரணத்தால் அவன் அருள் கிடைத்து அவன் பாதம் வணங்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும் )
19• சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை__
நம் எண்ணமும் மனமும் மகிழ்ச்சியில் கூத்தாடும் அளவுக்கு சிவபுராணம் தன்னை
20• முந்தை வினை முழுதும் மோய உரைப்பண் யான்__ ஓய_ ஓய்ந்து போகிற என்று அர்த்தம்,,
மோய வேரோடு பிடுங்கி சிவபுராணத்தை படிப்பதன் மூலம் முந்தை வினைஎன்னும் சஞ்சித வினையை (பழமையான வினையானது ஓய்ந்து விடும் அளவிற்க்கு வேரோடு பிடுங்கி எறியப்படும்)
21• கண் நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்து எய்தி நெருப்பு பொருந்திய நெற்றிக்கண்ணை உடையசிவபெருமான் வந்து இங்கு
22• எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி__ நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வீரம் நிறைந்த அவனுடைய திருவடிகளை பற்றிக்கொண்டு
23• விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் விண்ணுலகம் என்னும் தேவர் உலகத்திலும் மண்ணுலகம் என்னும் இப்__பூ உலகத்திலும் எங்கும் நிறைந்து ஒளியாக விளங்கும் எம்பெருமானே
24• எண்ணிறந்து எலலை இலா தானே!நின் பெரும் சீர்_ எல்லை இல்லாத நின் பெருமையான கழல் அடி
25• பொல்லா வினையே ன் புகழும் ஆறு ஒன்று அறியேன் உன் கீர்த்தியை புகழ்ந்து உரைக்கும் வழியை தீவினையேன் உன் அருளாலன்றி சிறிதும் அறிய முடியாது
திருச்சிற்றம்பலம்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
யாருக்கு எதுவென்று யார் அறிவாரோ !
அறுவை அழகேசன்
மழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி பல்விருகமாகிப், பறவையாய்ப் பாம்பாகி!
Short Story: மீளுதல்!
{{comments.comment}}