திருவாசகம்.. பதிகம் 1 .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க"!

Sep 25, 2026,12:27 PM IST

- சிவ.ப.மாலதி ராஜாராம்


திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள முதல் பதிகம் குறித்து இன்று காணப் போகிறோம்.


விநாயகர் துதி


ஐந்து கரத்தனை யானை முகத்தனை, இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தனைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.


திருவாசகம் பதிகம் - 1 சிவப்புராணம் -  (திருப்பெருந்துறையில் அருளியது)


சிவனது அநாதி முறைமையான பழமை, அநாதி என்றால் தொடக்கமும் முடிவும் இல்லாதது. அதுபோல் சிவனது ஆதியும் (தொடக்கமும்) அந்தமும் (முடிவும்) இல்லாத் திறத்தை குறிப்பது.


பதிகத்தின் முழு விளக்கம் மேலோட்டமாக காண்போம். பிறகு ஒவ்வொரு வரி அல்லது பாடலாக காணலாம். இப்பதிகமானது  95வரிகளைக் கொண்ட கலி வெண்பா ஆகும்





இப்பதிகத்தின் 2வது வரியிலேயே"இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க" என்று மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார், கண் இமைக்கும் ஒரு நொடி பொழுதுகூட நமது மனம் (எண்ணத்தை)விட்டு நீங்காமல் இருக்கிறார் என்றும் இப்பதிகத்தின் 18வது அடியில்""அவன் அருளாலே அவன் தாள் வணங்கி""என்று குறிப்பிடுகிறார் எனவே கோடிக்கணக்கான மக்களுக்கு இடையே நம்மைஅவன் தாள்(பாதம்)வணங்கவும், வாழ்த்தவும், அருள் கிடைத்தது என்றால் எவ்வளவு பெரிய சிறப்புஆகும் அவன் அருள் இல்லை என்றால்நம்மால் ஒரு அடி கூட நகர்த்த முடியாது


மேலும் 32வது வரியில் "மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்" இறைவனே எம்பெருமானே உணமைப்பொருளே உன் பொன் அடிகளை கண்டு இன்று வீடுபேறு என்னும் முக்திஅடைந்தேன் என்று சிலாகிக்கிறார்,,


இப்பதிகத்தில் இறைவனை வாழ்த்தி, வணங்கியும், எவ்வாறு போற்றிசெய்யவேண்டும், எந்த, எந்தப் பிறவி எல்லாம் எடுத்து அதாவது புல், புழு என்றவாறு  14 படிகளைக் கடந்து இம்மானிடப் பிறவி எடுத்துள்ளோம் என்பது மற்றும் ஐந்தொழில்களான ஆக்கம், அளவு, இறுதி இல்லாய், அனைத்து உலகையும் ஆக்குவாய், காப்பாய் அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய்  உன் அடியார்களுடன் என்றும் மற்றும் பாடல்களை பொருள் உணர்ந்து படிப்பது மற்றும் வணங்குவதால் ஏற்படும்நன்மைகளை கொடுத்துள்ளார்.


திருச்சிற்றம்பலம்


(தொடரும்)


(மாலதி ராஜாராம்,  உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

செல்வம் பெற இப்பதிகம் பாடுக!

news

திருவாசகம்.. பதிகம் 1 .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க"!

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

news

தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!

news

ஏகாதசி விரதத்தின் மகிமை அல்லது அம்பரீஷ மஹாராஜாவின் பக்தி!

news

கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!

news

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்