- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
இது
விரலுயர்த்தி வானம்
தொட்டு
இறுதியில் எமனையும் சந்திக்கும் முயற்சி...
-
ஊக்குவிக்க மட்டும்
நீங்கள்
பின் தொடரலாம் நடக்காது
முடியாதென்பவர்
யாரேனுமிருந்தால்
சொல்லிக்கொள்ளாமலே
பின் வாங்கலாம்...
-
உங்களுக்கான
திசை வேறு
அதற்கே
எழுதிய வார்த்தைகளில் கொஞ்சம் கடுமை...
-

முகில் துண்டொன்றை
எட்டி
பிடித்தாயிற்று
அடுத்து
வானம் தொட பயிற்சி...
-
வானம் தொட்டதும்
வான் பரப்பில்
கொண்டாட்டாம்...
-
இடியை இடிக்கச்சொல்லி
காது கிழிய கேட்டு விட்டு
மின்னலையும்
மின்ன சொல்வோம்...
_
வாய்ப்பிருந்தால்
நிலவில் விருந்து
விண்மீன்களோடு
உற்சாக
கும்மாளம்...
_
கடவுளர்களை கண்டு
கைகுலுக்கி புகைப்படமொன்று எடுத்துக்கொண்டு
இன்னும்
நேரமிருந்தால்
இந்திர சபைக்கு
இந்த பயணம்...
-
எதிர்படும் எமனிடம்
ஏனிந்த இறப்பென
கேட்போமா?..
-
எந்த நாள்
எம் இறுதியென
ஆயுள் குறித்தும்
அடுத்தொரு
கேள்வி தொடுப்போமா?..
-
சித்திரகுப்தனிருந்தால்
எழுதிய ஏடுகளில்
யார் யாருக்கு எத்தனை
ஆண்டென இறுதியாய் கேட்டு திரும்பலாமா?..
-
பின்தொடர்ந்து
இனி அடுத்து
நமக்கு
அல்லது இவனாகிய எனக்கு
சுட்டெரிக்கும் சூரியனே இலக்கு
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
{{comments.comment}}